india

img

விசாரணை அமைப்புக்களை ஏவி மிரட்டுவதா?

புதுதில்லி, ஜூலை 1 - அமலாக்கத்துறை, சிபிஐ  உள்ளிட்ட விசாரணை அமைப்பு களை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக வழிநடத்துவதாக கூறி  எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளு மன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களை விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்து ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை நசுக்க நினைப்பதாக குற்றம் சாட்டினர்.

எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்த வேண்டும், எதிர்க்கட்சிகளை அமைதியாக்க விசாரணை அமைப்புகளை தவறாக வழிநடத்துவதை தவிர்க்க வேண்டும் என பதாகைகளையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏந்தினர்.

;