india

img

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு

புதுதில்லி, ஜூன் 26- மக்களவை சபாநாயகர் மீண்டும் ஓம்பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை சபாநாயகர் தேர்வில் பாஜக மரபுகளை பின்பற்றாமல் போட்டியை உருவாக்கியது. நாடாளு மன்ற மரபுப்படி துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கி னால், தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால் இதனை ஏற்காத பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி யின் வேட்பாளராக ஓம்  பிர்லாவை களமிறக்கியது. கோரிக்கை நிராகரிக்கப் பட்டதால் “இந்தியா” கூட்டணி, காங்கிரஸ் கட்சியின் 8 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷை  வேட்பாளராக களமிறக்கியது. 

இதனால் 48 ஆண்டு களுக்கு பின் முதல் முறை யாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. 

ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிமொழிந்தார். அமைச்சர்கள் லல்லன் சிங் (ஐக்கிய ஜனதாதளம்), ஜிதன் ராம் மஞ்சி (அவாமி மோர்ச்சா), அமித் ஷா, சிராக் பஸ்வான், எச்.டி. குமாரசாமி (மஜத), ராம் மோகன் (தெலுங்கு தேசம்) ஆகியோர் வழிமொழிந்தனர். 

எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக காங்கிரஸ் எம்.பி. கொடிக் குன்னில் சுரேசின் வேட்பு மனு தாக்கல் செய்யப் பட்டது. எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மனுவை முன்மொழிந்தார். அரவிந்த் கன்பத் சாவந்த் (சிவசேனா - உத்தவ்), ஆனந்த் பதூரியா (சமாஜ்வாதி), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்) ஆகியோர் வழிமொழிந்தனர்.

இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் சபா நாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். கடந்த 25 ஆண்டு களில் தொடர்ந்து இரண்டா வது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர்  ஓம் பிர்லா. மக்களவை சபா நாயகராக தேர்வு செய்யப் பட்டுள்ள ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய நாடாளுமன்ற விவ காரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் அமர வைத்து வாழ்த்து தெரிவித்த னர்.

;