india

img

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள்!

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதல்வர்கள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக தெலுங்கானா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.