india

img

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாரபட்சமானது - ஐநா மனித உரிமை ஆணையம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாரபட்சமானது என்று ஐநா மனித உரிமை ஆணையம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களில் இஸ்லாமியர் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மத்திய அரசு இரு அவைகளிலும் நிறைவேற்றியது. பின்னர் அச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இதற்கு அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

இந்நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையம், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அடிப்படையில் பாரபட்சமானது.  குறிப்பிட்ட சில அமைப்பு சார்ந்தவர்களை பாதுகாப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால், அதே போல நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை வழங்கவில்லை” என ஐநா மனித உரிமைகள் ஆணையம் பதிவிட்டுள்ளது. 
 

;