india

img

மொத்த கல்வி கடன்களில் 70 சதவீதம் பொது பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கல்வி கடன்களில் 70 சதவீதம், உயர் சாதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கல்வி கடன்களை குறித்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி), கல்விக் கடன்களுக்கான அரசு நிதியளிக்கும் ஜாமீன் திட்டத்தின் தரவுகளை வழங்கியது. அதில், 2016-17 நிதியாண்டில் இருந்து இப்போது வரை கிடைத்த தரவு, திட்டத்தின் கீழ் பயனடைந்த 4.1 லட்சம் மாணவர்களில், 67% பேர் பொது பிரிவை சேர்ந்தவர்கள் (ஜி.சி). 23% மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் (ஓபிசி), 7% பட்டியலின வகுப்பை (எஸ்சி) சேர்ந்தவர்கள் மற்றும் 3% பழங்குடியினர் (எஸ்.டி) என்று தரவுகள் தெரிவிக்கின்றது.

முக்கியமாக, பொது பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடனின் அளவு மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக, 67% மாணவர்கள் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் சிஜிஎஃப்எஸ்இஎல் திட்டத்தின் கீழ் உள்ள மொத்த, ரூ.13,797 கோடி கடன் தொகையில் 70% பொதுப்பிரிவினர் பெற்றனர். ஒரு பொதுப் பிரிவு மாணவருக்கு இந்த திட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 3.54 லட்சம் ஆகும். இதற்கு மாறாக, மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, முறையே ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் கடன் தொகை அளவு ரூ.2.91 லட்சம், ரூ. 3.24 லட்சம், மற்றும் ரூ. 3.17 லட்சம் என்ற வரிசையில் வழங்கப்பட்டுள்ளது.

;