india

img

இந்திய கடற்படையின் மிக்-29 ரக போர் விமானம் விபத்து

கோவாவில் மிக் -29 கே ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட 2 விமானிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.  

கோவா மாநிலத்தின் பனாஜியில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா என்ற இந்தியக் கடற்படைத் தளத்தில் இருந்து மிக் -29 கே போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயிற்சி விமானிகள் இருவர் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே வெர்னா பகுதியில் விமானம் பறந்தபோது கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. விமானத்தின் எஞ்சின் தீப்பற்றி எரிந்ததால் வெர்னா தேவாலயம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

;