india

img

தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டதும் சுடவேண்டும் என்ற இந்து மகா சபை  தேசிய செயலாளர் கைது

தில்லி மாநாடு குறித்து மதமோதலை தூண்டும்  கருத்து தெரிவித்த இந்து மகாசபா தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை இந்தியாவில் 4871 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளனர். அதேசமயம் சிகிச்சை பலனின்றி 148 பேர் பலியாகியுள்ளனர் என தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இம்மாத துவக்கத்தில் பல்வேறு வெளிநாட்டினரின் பங்களிப்போடு தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்து மகாசபா தேசிய செயலாளரான பூஜா சகுன் பாண்டே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதமொன்றில் தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை, கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, காந்தி நகர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.  
பூஜா கடந்த ஆண்டு மகாத்மா காந்தி நினைவு நாளில் காந்தியின் உருவ பொம்மையை சுட்டார். மேலும் கோட்சேவின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

;