india

மே 30 மோடி பதவியேற்பு?

புதுதில்லி, மே 25-குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வெள்ளி இரவு நேரில் சந்தித்தபிரதமர் நரேந்திர மோடி 16ஆவது மக்களவையைக் கலைக்க அமைச்சரவைக் குழுநிறைவேற்றிய தீர்மானத்தை வழங்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை தங்களது பணிகளை தொடருமாறு மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளி இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை 3 தேர்தல் ஆணையர்களும் இணைந்து குடியரசுத் தலைவரை சில தினங்களில் நேரில் சந்தித்து வழங்கவுள்ளனர். இதன்பிறகு மே 30ஆம் தேதி மீண்டும் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

;