india

img

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு   சிலிண்டர் ரூ.25.50 குறைக்கப்பட்டு ரூ.1,859க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், சென்னையில் ரூ.2,009.50க்கும், மும்பையில் ரூ.1,811.50க்கும், கொல்கத்தாவில் ரூ.1,959க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை. கடந்த ஜூலை 6-ஆம் தேதி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை யூனிட்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

;