india

img

மக்களவையில் விவாதமின்றி நிதி மசோதா நிறைவேற்றம்!

மக்களவையில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியிலும், விவாதமின்றி நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 
மக்களவையில் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவை தாக்கல் செய்தார். 45 திருத்தங்களுடன் விவாதமின்றி நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 
இதில், சில கடன் பரஸ்பர நிதிகளுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால வரி சலுகைகளை திரும்பப் பெறுவது மற்றும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைப்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மோடி ஆட்சியில் விவாதத்திற்கும், ஜனநாயகத்திற்கு இடமில்லை; இந்த நடைமுறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்று சிபிஎம் மத்திய குழு தெரிவித்துள்ளது.

;