india

img

லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு!

லடாக் யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மோடி அரசு, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அப்போது முதல், லடாக் யூனியன் பிரதேசம் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜான்ஸ்கார், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவற்றை புதிய மாவட்டங்களாக அறிவிக்க உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய மாவட்டங்கள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் லடாக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்கிறது.