india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அதிகாரப்பூர்வ  வேட்பாளரானார் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், ஜூலை 27 - அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போ தைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதனால், ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போ தைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறக்கப் படுவார் என்று தகவல்கள் வெளியாகின. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்டோரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதி காரப்பூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் சனிக்கிழ மையன்று கையெழுத்திட்டு ளார். இதன்மூலம் அவர் அதி காரப்பூர்வமாக ஜனநாய கக் கட்சியின் வேட்பாளராகி யுள்ளார்.

ஆக.23இல் மோடி உக்ரைன் பயணம்?

புதுதில்லி, ஜூலை 27 - கடந்த மாதம் நடை பெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், அவர் ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. எனினும், ஒன்றிய வெளியுறவு அமைச் சகம் பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணத் தை உறுதிப்படுத்தவில்லை. கடந்த 8-ஆம் தேதி  மோடி யின் ரஷ்யப் பயணம் தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - லாவோஸ் ஒப்பந்தங்கள்  கையெழுத்து!

புதுதில்லி, ஜூலை 27 - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (ஏசியன்) கூட்டங்களில் பங்கேற்பதற் காக, லாவோஸ் மக்கள் ஜன நாயக குடியரசு நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு லாவோஸ் வெளி யுறவுத் துறை அமைச்சர் சலூம்ஷே கம்மாசித் உடனான ஜெய்சங்கரின் சந்திப்பில், இரு நாடு களுக்கிடையே எண்ம தீர்வு கள் பகிர்மானம் மற்றும் மீகாங் - கங்கா ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உடனடித் திட்டங்கள் குறித்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மீகாங் - கங்கா ஒத்துழைப்புத் திட்டம் (எம்.ஜி.சி.) என்பது ஆறு ஆசிய நாடுகளான இந்தியா, கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் சுற்றுலா, கலாச்சாரம், கல்வி, போக்கு வரத்து, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ஒத்து ழைப்பு ஏற்படுத்த எடுக்கப் பட்ட முன்னெடுப்பாகும்.