சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.