india

img

கோவிட்-19 பாதிப்பு நவம்பரில் உச்சத்தை எட்டும் - ஆய்வு தகவல்

இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் மத்தியில் உச்சத்தை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆரின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 11,502  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,69,798 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,53,106 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஐ.சி.எம்.ஆரின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடையாமல், கால அளவை நீட்டித்துள்ளது. தொற்று உச்சத்தை எட்டும் நாட்களானது, 36 நாளில் இருந்து 76 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் மத்தியில் உச்சத்தை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

;