சர்வதேச ராணுவ செலவினத்தில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, கடந்தாண்டு ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கிய நாடுகளில் அமெரிக்கா ரூ.71 லட்சம் கோடி செலவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடத்தில் உள்ள சீனா ரூ.23 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. அதே போல் 3வது இடத்தில் உள்ள ரஷ்யா ரூ.7.06 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. ரஷ்யாவின் ராணுவச் செலவு கடந்த ஆண்டு 9.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது
கடந்த ஆண்டில் ரூ.6.6 லட்சம் கோடி செலவு செய்து சர்வதேச ராணுவ செலவினத்தில் 4 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டை விட 6 சதவிகிதம் அதிகமாகும். அதுமட்டுமல்லாமல் 2013 ஆம் ஆண்டை காட்டிலும் இது 47 சதவிகிதம் அதிகமானதாகும்.