india

img

இந்தியாவில் 5 லட்சத்தை கடந்த கோவிட்-19 பாதிப்பு – ஒரே நாளில் 18,552 பேருக்கு தொற்று

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், ஒரே நாளில் 18,552 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,10,068 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,96,991  ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,60,798 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 18,552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மொத்தமாக கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,95,881 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,97,387 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,52,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,106 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தில்லியில், 77,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,492 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 74,622 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 957 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 30,095 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,771 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

;