india

img

உலகளவில் உள்ள இதய நோயாளிகளில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள்

உலகளவில் உள்ள இதய நோயாளிகளில், 40 சதவீதம் நோயாளிகள் இந்தியர்கள் என மருத்துவ குழு விவாதம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

மக்களிடையே இதய நோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம், நொவர்டிஸ் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து ‘பீட் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற நிகழ்ச்சியை பல நகரங்களில் நடத்தி வருகிறது. மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர். இதில், உலகளவில் உள்ள இதய நோயாளிகளில்,  40 சதவீதம் நோயாளிகள் இந்தியர்கள் என்றும், இந்தியாவில் இதயம் சார்ந்த நோயால் சுமார் 2 கோடியே  60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகரித்து வரும் இந்த நோயை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

பிற நோய்கள் முதலிலேயே கொடூர வலியுடன் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நிலையில், இதயம் சார்ந்த நோய்கள் முதலில் லேசாக தொடங்கி பின்னர் கடுமையான வலியை ஏற்படுத்துவதாகவும், இதனால் இவ்வகை நோயை நோயாளிகள் எளிதில் கண்டுபிடிக்க தவறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நோய் பாதிப்பை கட்டுப்படுத்த, இதய நோயாளிகளை முறையாக கணக்கெடுத்து, மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதற்கென சிறப்பு பிரிவுகளை அமைப்பதே தீர்வாகும் என தெரிவிக்கப்பட்டது.

;