india

img

கோவிட்-19 : இந்தியாவில் 1.45 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்துள்ளது; பலி எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையிலும், நோய் தொற்றின் பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,45,380 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60,490 பேர் கோவிட்-19 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் 52,667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,695 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 17,082 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 118 பேர் உயிரிழந்துள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் 14,460 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 888 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 14,053 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

        
 

;