india

img

கோவிட்-19 : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,003 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,64,468 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,46,135 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43,21,498 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,55,065 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 10,974  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 2003 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மொத்தமாக கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,86,935 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,55,227 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,13,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,537 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 48,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 528 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 44,688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,837 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 24,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,533 பேர் உயிரிழந்துள்ளனர்.

;