india

img

கோவிட்-19: இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த பாதிப்பு

இந்தியாவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,52,413 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,82,481 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,67,681 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,00,303 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 72,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,465 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 24,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 22,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 556 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 17,617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1092 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

;