இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 12,193 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில், 12,193 பேருக்கு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67,556 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 4 சதவீதம் அதிகம். தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து 10,765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.