india

img

கொரோனா பரவல்

புதுதில்லி, ஜன.6- நாட்டில் கடந்த 8 மாதங்க ளுக்கு பிறகு கொரோனா பர வல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24  மணிநேரத்தில் புதிதாக 761  பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருப்ப தாக ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.  

இதுதொடர்பாக சுகாதா ரத்துறை மேலும் கூறுகை யில், “கேரளாவில் அதிக பட்சமாக 1,249 பேர்,  கர்நாட காவில் 1,240 பேர், மகா ராஷ்டிராவில்  914 பேர்,  தமிழ்நாட்டில் 190 பேர், சத் தீஸ்கர் மற்றும் ஆந்திரத்தில் தலா 128 பேர் என கடந்த 24  மணி நேரத்தில் நாடு முழு வதிலும் இருந்து புதிதாக 761 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர்  

எண்ணிக்கை மீண்டும் 4,334-ஆக அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் 5 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிரத்தில் 2 பேரும், உத்தரப்பிரதேசத்தில் ஒருவ ருமாக கடந்த 24 மணி நேரத்  தில் 12 பேர் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.