india

img

இந்திய விமானப்படையில் 8 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் இணைப்பு!

அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட  ஏஎச்-64இ என்ற அப்பாச்சி ரக 8 போர் ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

உலகிலே அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஏஎச்-64இ என்ற அப்பாச்சி ரக  22 போர் ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா, அமெரிக்காவுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 4 ஹெலிகாப்டர்கள்  உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் இணைக்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில்  8 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் இன்று விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. இதன்மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் 14-வது நாடாக இந்தியா உள்ளது. மேலும், வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;