india

img

நிரந்தர ஆசிரியர்களுக்குப் பதிலாக கவுரவ ஆசிரியர்களா? தில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு

புதுதில்லி, அக். 4- நிரந்தர ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ‘தினக்கூலி’ அடிப்படையில் கவுரவ ஆசிரியர்களை நியமித்திட பல்கலைக்கழகம் முடிவு செய் திருப்பதைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தில்லிப் பல்கலைக் கழகம் தங்கள் பணி நிலைமைகள்மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வரு வதைக் கண்டித்து, தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வியாழன் அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இவர்களின் வேலைநிறுத்தத் திற்கு மாணவர்களும் ஆதரவு அளித்தனர். வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்கள் பல்கலைக்கழக  வளாகத்தினுள் பேரணியாக முழக்க மிட்டவாறு சென்றனர். தில்லிப் பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.  அதில், முழுநேர ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ஒரு விரிவுரைக்கு இத்த னை ரூபாய் என்கிற தினக்கூலி அடிப்படையில் கவுரவ ஆசிரி யர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று  கூறப்பட்டிருந்தது. இது அமலானால், இது ஆசிரியர்கள் போதிக்கும் திறனில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தில்லிப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறினார்கள்.  மேலும், கடந்த பத்தாண்டுகளாக ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் இதனால் ஏராளமான ஆசிரியர்கள் வெளியேறிவிட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த ஆண்டு சுமார் மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

;