india

img

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பலத்த அடி

புதுதில்லி, ஜூலை 13- தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், மத்தியப்  பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்ச லப்பிரதேசம் ஆகிய 7  மாநிலங்களில் 13 சட்டப்  பேரவைத் தொகுதி களுக்கு, கடந்த ஜூலை 10 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு எண் ணப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி பலத்த அடி வாங்கியுள்ளது.

7 மாநிலங்களில் 13  தொகுதிகளுக்கு நடை பெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. 

10 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜக மற்றும் அதன்  கூட்டணி ஆட்சி நடக்கும்  உத்தரகண்ட், பீகார்  ஆகிய மாநிலங்களி லேயே பாஜக தோல்வி அடைந்துள்ளது.