india

img

இந்திய தயாரிப்பு கண் மருந்தால் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று! - இலங்கை அரசு குற்றச்சாட்டு

இந்திய தயாரிப்பு கண் மருந்தால் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனம் தயாரித்த மெத்தில்பிரெட்னிசோலோன் (Methylprednisolone) கண் மருந்தால், இலங்கையில் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு இந்திய மருந்து ஏற்றுமதி கவுன்சில் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பார்மெக்சில் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதை அடுத்து மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்த ஆய்வை தொடங்கியுள்ளது.
 

;