india

img

மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி முழக்கத்தை உயர்த்திப் பிடிப்போம்....

கடைசி பத்தி தொடர்ச்சி...

நிற்க முடியும். மாநில உருவாக்க நாளைக் கொண்டாடுகிறவர்கள் மீது இன்றைக்குத் தடை விதிக்கிறார்கள்; கைதுசெய்திருக்கிறார்கள். எடப்பாடி அரசு இதைச் செய்திருக்கிறது. இந்த நாள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு உரிமைகளும் பறிக்கப்படும் நாளாக நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதேநாளில் நிகழ்ந்த புதுச்சேரி விடுதலை நாளை நாம் நினைவுகூராமல் இருக்க முடியாது.

இந்திய அரசு உண்மையான கூட்டாட்சியாக இருக்க வேண்டும். அண்ணாவின் உரைகளைப் படிக்கும் போது, அவர் கூட்டாட்சி என்ற கோட்பாட்டை, சோவியத் யூனியன், கனடா போன்ற நாட்டுக் கருத்துக்களிலிருந்துதான் பெற்றுக் கொண்டார் எனத் தெரிந்துகொண்டேன். மாநில உரிமைகள், கூட்டாட்சித் தத்துவம் பற்றிக் கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், கு.ச.ஆனந்தன், பேராசிரியர் நாகநாதன் உள்ளிட்டவர்கள் பெரும்பாலும் மேற்கோள் காட்டிப் பேசுவது சோவியத் யூனியன் கூட்டமைப்பைத்தான்.இந்தச் சிந்தனை அவர்கள், இடதுசாரி இயக்கங்களிடம் பயின்றதுதான்.1974 இல் தமிழக சட்டசபையில் முன்வைக்கப்பட்ட, மாநில சுயாட்சித் தீர்மானத்தை மீண்டும் முன்வைப்பதுதான் போராட்டத்தைத் தொடங்குவதற்கான முறையாக இருக்கும்.ஜோதிபாசு, என்டிஆர், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானங்கள் வழியாக ஒட்டுமொத்தமான சித்தாந்தப் பிணைப்பை உருவாக்க முனைந்தால், அது அந்தந்ந மாநில மக்களின் குரலாக ஒலிக்குமானால் மிகப்பெரிய வெற்றியைத் தரும்.

தொகுப்பு:  கி.அன்பரசன், கே. சண்முகம், பேரா.செல்வக்குமார், பேரா.பார்த்திப ராஜா
 

;