india

img

‘தூய்மை இந்தியா’ கழிப்பறைத் திட்டம் தோல்வி

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட - 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கழிப்பறைகளில் தண்ணீர் வசதியில்லை என்றும், இதனால் அந்த கழிப்பறைகள் யாருக்கும் பயன்படாமல் பூட்டியே கிடப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ‘சுவச் பாரத்’ என்ற பெயரில் மோடி படாடோபமாக அறிவித்த திட்டம்தான் தூய்மை இந்தியா திட் டம். இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் கழிப்பறை கட்டிக்கொள்வதற்கு, ஏழைகளுக்கு ரூ. 9 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ. 3 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த வகையில், நாடு முழுவதும் மூன்றரைக் கோடி புதிய கழிப்பறைகள் கட்டப் பட்டதாக மோடி அரசின் புள்ளி விவரக் கணக்கும் காட்டியது. இந்நிலையில், ‘தூய்மை இந்தியா’ திட்டம் இலக்கை அடைந்திருக்கிறதா? என்று அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், பல உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில்- சுமார் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கழிப்பறைகள், தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளன; அத்துடன் கழிவுநீர் வெளியேறும் வசதிகளும் இங்கு செய்துதரப்படவில்லை. இதனால், 60 சதவிகித கழிப்பறைகளும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. அசாம், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டப் பட்டுள்ள பொதுக்கழிப்பறைகளைப் பராமரிப்பதற்கு துப்புரவு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. வீடுகளில் கட்டப்பட்ட கழிப்பறைகளிலும் தண்ணீர் வசதியில்லை. அத்துடன் இந்த கழிப்பறைகள், கழிவுநீர் வாய்க்காலில் இணைக்கப்படவில்லை. இதனால் பலர் மீண்டும் திறந்தவெளி கழிப்பறையையே உபயோகிக்கத் துவங்கியுள்ளனர். ஒருசிலர், தங்கள் வீட்டில் கட்டப்பட்ட கழிப்பறைகளை சமையலறைகளாகவும், பழைய பொருட்களை போட்டு வைக்கும் இடமாகவும் மாற்றியுள்ளனர்.

;