india

img

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;

விளம்பர எண். 1A / 2021-22

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)

மொத்த காலியிடங்கள்: 14

 

பணி:  Legal Officer

சம்பளம்: மாதம் ரூ.55,200

 

பணி: Manager

சம்பளம்: மாதம் ரூ.55,200

 

பணி: Library Professional

சம்பளம்: மாதம் ரூ.44,500

 

பணி: Curator

சம்பளம்: மாதம் ரூ.44,500

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், கலை, அறிவியல், நூலக அறிவியல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், வரலாறு, பொருளாதாரம், நுண்கலை, தொல்லியல், இசையியல், நாணயவியல் ஆகியவற்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.20202 தேதியின்படி, 21 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். வங்கியின் ஊழியர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவம், கட்டணம் செலுத்துவதற்கு https://ibpsonline.ibps.in/rbidec21/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4077 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;