விவசாயிகளின் போராட்டத்தை அராஜகம் என்று கூறிய உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சம்யுக்த கிசான் மோர்ச்சா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கை யில், “விவசாயிகளின் போராட்டத்தை அராஜகம் என்று கூறிய உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும். போராட்டம் செய்வது இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு சட்ட உரிமை ஆகும். 1857 மற்றும் 1947இல் நடந்த சுதந்திரப் போராட்டங்கள் மூலமாக ஆங்கில காலனித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான மக்களின் பெரும் போராட்டங்கள் வழி யாகவே இந்திய அரசியலமைப்பு உரு வாக்கப்பட்டது. உரிமைகளுக்கான விவ சாயிகளின் போராட்டத்தை அவமதிப்பது உத்தரப்பிரதேச முதல்வர் என்ற அரசி யலமைப்பு பதவியில் இருப்பவரிட மிருந்து எதிர்பார்க்க முடியாதது. இந்த அறிக்கை நவீன ஜனநாயக சமூகங்களின் நெறிமுறைகளுக்கு எதிரானது மற்றும் உத்தரப்பிரதேச மக்கள் அனைவருக்கும் அவமானகரமானது ஆகும். எனவே ஆதித்யநாத் உடனடியாக இந்த அறிக்கையை திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும்.
விதிமுறைகள் இல்லாமல் வீட்டுக்காவல்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) அல்லது பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவில் (BNSS) விதிமுறைகள் இல்லாத போதும், ‘வீட்டுக் காவல்’ என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து விவசாய தலைவர்களை தடுத்து வைக்க காவல்துறையை உ.பி. முதல்வர் தவறாக பயன்படுத்துகிறார். லக்கிம்பூர்கேரி படுகொலை சம்பவத்தில் கடுமையாக காயமடைந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் தஜிந்தர் சிங் விர்க் கத்கர் காவல் நிலையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். டிசம்பர் 4-ஆம் தேதி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த கிசான் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்வதைத் தடுக்க ராகேஷ் திகாயத் அலிகார் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டார்.
தர்ணாவில் அமர்ந்திருந்த மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற விவசாயிகள் பிணையில் வெளி வரக்கூடிய குற்றச்சாட்டுகளுக்காக சிறை யில் அடைக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்ட அழுத்தத்தால் நீதிமன்ற ஆய்வு இல்லாமலேயே அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் யமுனா எக்ஸ்பிரஸ்வே ஜீரோ பாயிண்ட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற் காக 120 விவசாயிகள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள், குற்றவாளிகளோ தீவிர வாதிகளோ அல்ல. அவர்களின் நியாய மான கோரிக்கைகளுக்கான ஜனநாயக முறையிலான போராட்டத்தை அடக்கு வதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் இவை என சம்யுக்த கிசான் மோர்ச்சா கருதுகிறது. ஆதித்யநாத் அரசின் சர்வாதி காரத்திற்கு எதிராக போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் உட்பட போராட்டக் காரர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட னர். வரும் நாட்களில் கைது செய்தாலும் போராட்டத்தை தொடரப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்து நீதித்துறையும் அரசியல் கட்சிகளும் தலையிட வேண்டும்” என அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.