india

img

கூகுள் டூடுல் 2022 விருது வென்ற கொல்கத்தா சிறுவன்!

2022-ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் இந்தியா விருதை, கொல்கத்தாவை சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி வென்றுள்ளார்.
சிறுவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க, ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுலுக்கான போட்டியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதிலும் 100க்கு மேற்பட்ட நகரங்களில், 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்குப்பெற்றனர். 1,15,000 படைப்புகளில் ’இந்தியா ஆன் தி செண்டர் ஸ்டேஜ்’ என்ற தலைப்பில் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்லோக் முகர்ஜியின் டூடுல், 2022-ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் இந்தியா  விருதை வென்றுள்ளது. 
"அடுத்து 25 ஆண்டுகளில் இந்தியாவில் மனிதர்களின் மேம்பாட்டிற்காக ரோபோக்களை விஞ்ஞானிகள்  உருவாக்குவார்கள். இந்தியாவில் பூமிக்கும் விண்ணுக்கும் போக்குவரத்து நடைபெறும். இந்தியாவில் யோகாவும், ஆயுர்வேதமும் மேலும் வளரும், வரும் ஆண்டுகளில் இந்தியா மேலும் வலுவடையும்" என்று தனது டூடுல் குறித்து ஸ்லோக் முகர்ஜி விளக்கம் அளித்திருந்தார்.
 

;