india

img

கிரிமினல் வழக்கு விவரங்களை மறைத்த பட்னாவிஸ் - நாக்பூர் நீதிமன்றம் சம்மன்

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் 2 கிரிமினல் வழக்குகளின் விவரங்களை மறைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தற்போது நாக்பூர் எம்.எல்.ஏவாக உள்ளார். கடந்த 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில், பட்னாவிஸ் பண மோசடி செய்ததாகவும், இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு படி உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அன்று உத்தரவிட்டது.  

இதை தொடர்ந்து, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், இரு கிரிமினல் வழக்குகளின் விவரங்கள் பட்னவிஸ் மறைத்ததற்காக, நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த  நவம்பர் 4-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நடுவர் நீதிமன்றம் இதனை குற்ற வழக்காக அறிவித்து, சம்மன் அனுப்பும் படி உத்தரவிட்டது. இந்நிலையில், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125 ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக, பட்னாவிஸ் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

;