வடமாநிலங்களில் வெப்ப அலை குறைந்து பலத்த காற்று டன் கனமழை பெய்து வரு கிறது. இதனால் தலைநகர் தில்லி, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங் கள் கடுமையாக பாதிப்பை எதிர் கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்த கனமழையால் தில்லியின் நிலைமை படுமோசமாகியுள்ளது.
கனமழை குறித்து இந்திய வானிலை மையம் முழுமையான எச்சரிக்கை தகவல் விடுக்காததால், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை இன்றி தில்லி நகரமே மிதக்கிறது. மேற்கு தில்லி, ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிக ளில் நிற்க வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதே போல மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், வெள்ளி யன்று அதிகாலை 5:30 மணியளவில் தில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரி ழந்தனர். 6 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மூழ்கிய அயோத்தி ரயில் நிலையம்
தில்லியைப் போல உத்தரப்பிரதே சத்திலும் மழை வெளுத்து வாங்கி வரு கிறது. இதனால் அயோத்தி ரயில் நிலை யம், ராமர் கோவில் சாலை வெள்ளத் தால் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதை யடுத்து “ராமர் கோவிலை மட்டும் கட்டி விட்டு வடிகால் எதுவும் அமைக்க வில்லை” என மோடி அரசு மீது அயோத்தி மக்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ள னர். இதே போல் குஜராத் மாநிலமும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.