india

img

சிடெட் தேர்வில் 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி

சிடெட் (CTET) எனப்படும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நாடு முழுவதும், 29.22 லட்சம் பேர்  சிடெட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஜூலை 7-ஆம் தேதி, 114 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 23.77 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.  இந்த தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது. இதில் வெறும் 3.52 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

;