india

img

ரூ.10  நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்- ரிசர்வ் வங்கி

ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
நாட்டின் பல பகுதிகளில் ரூ.10 நாணயங்களை கடைகளில் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அச்சம் அடையும் பொதுமக்கள் வங்கிகளிலோ அல்லது அஞ்சலகங்களில் கொடுக்க முயன்றால் அங்கும் வாங்க மறுக்கின்றனர். பேருந்துகளில் நடத்துனர் உள்ளிட்ட பல அரசு அலுவலங்களில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால்,பொதுமக்கள் தேவையற்ற குழப்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள். தமிழகத்தின் சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்கப்படுவதில்லை. எனவே, இதுதொடர்பான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு சென்றதையடுத்து, ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
“கடந்த 1906ம் ஆண்டு இந்திய நாணயச் சட்டத்தின்படி, 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என்று அறிவிப்பதோ சட்டப்படி குற்றம். அப்படி செய்வோர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124இன் படி வழக்குப்பதிவு செய்ய முடியும். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்றி யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

;