சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் 93.12% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கிய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 21-ஆம் தேதி நிறைவடைந்தது. இத்தேர்வை 21.86 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் 93.12% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.28 சதவிகிதம் குறைந்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுவை, http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துகொள்ளலாம்.