india

img

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது

மாநில பாஜக தலைவர் அறிவிப்பு

மும்பை,நவ.10-  மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று கட்சியின் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ஆட்சியமைக் கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும்  தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. பாஜகவின் கூட்டணிக்கட்சி யான சிவசேனை, முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதி யாக இருப்பதால் ஆட்சியமைக்க முடியாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.  இந்நிலையில் பாஜகவைச்  சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி யை சந்தித்து அளித்தார். அப்போது,  மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல் வர்  பதவியில் நீடிக்குமாறு  பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற வகையில், ஆட்சியமைக்க விருப்பமா என்று கேட்டு சனிக்கிழமையன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இதன்படி ஞாயிறன்று மாலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் மாநில  பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகை யில், மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை.  பாஜக-சிவசேனை கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்த னர். ஆனால், பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிக்காமல் மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா நினைத்தால்  அந்த முயற்சிக்கு எங்களது நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

 

;