பி.எஸ்.பி எம்.பி கன்வார் தானிஷ் அலியை அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியை கைது செய்யக் கோரி சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. கன்வார் தானிஷ் அலியை இழிவாகவும், இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி அநாகரிகமாகவும் பாஜக எம்.பி., ரமேஷ் பிதுரி பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், ரமேஷ் பிதுரியை கைது செய்யக் கோரி சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ரமேஷின் பேச்சு இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பாஜக தலைமை ரமேஷுடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.