india

img

பாஜகவின் அரசியல் சதி முறியடிப்பு

ராஞ்சி, ஜூலை 4- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மூன்றா வது முறையாக ஜார்க்கண்ட் முதல்வ ராக பதவியேற்றுக் கொண்டார். அவ ருக்கு மாநில ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்து வந்த  நிலையில், அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் மோடி அரசு, அமலாக் கத்துறையை ஏவி, கடந்த ஜனவரி 31 அன்று, சட்டவிரோதப் பணப் பரி வர்த்தனை வழக்கில் கைது செய்தது.  

கைது செய்யப்படுவதற்கு முன்பு  தமது கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரனை முதல்வராக்கினார் ஹேமந்த் சோரன். இதனால், ஜார்க் கண்ட்டில் அரசியல் குழப்பத்தை ஏற் படுத்தும் பாஜகவின் முதல் சதி முறியடிக்கப்பட்டது. எனினும், ஆதாரம் எதுவும் இல்லா மலேயே, ஹேமந்த் சோரனை ராஞ்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

தன்னை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கடந்த 5 மாதங்களாக விசாரணை நீதிமன்றம், ராஞ்சி மாவட்ட நீதிமன்றம், ராஞ்சி உயர் நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன்முறையிட்டார்.  

கடைசியாக மீண்டும் ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு ஜூன் 28 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஹேமந்த் சோரன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரப்பூர்வமாக மறுத்தார்.  ஹேமந்த் சோரனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரோங்கோன் முகோபாத்யாய், “இந்த வழக்கில் ஹேமந்த் சோரன் குற்றவாளி அல்ல  என்று நம்புவதற்கான காரணங்கள் அனைத்தும் உள்ளன.

பிறகு ஏன் தொடர்ந்து அவரை ஏன் சிறையில் அடைக்க வேண்டும். இது நல்லதல்ல”  எனக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனால், ஜூன் 28 அன்று மாலையே சிறையில் இருந்து விடுதலை யாகி வெளியே வந்தார் ஹேமந்த் சோரன்.  இந்நிலையில், ராஞ்சியில் உள்ள முதல்வர் சம்பய் சோரன் இல்லத்தில் புதனன்று (ஜூலை 3) ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், ஹேமந்த் சோரன் மீண்டும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்று மாலையே முதல்வர் பதவியில் இருந்து சம்பய் சோரன் விலகினார்.  அதைதொடர்ந்து, வியாழனன்று ஆளுநர் மாளிகையில் 3ஆவது முறை யாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்; ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் அவரது தந்தை சிபு சோரன், தாயார் ரூபி சோரன், மனைவி கல்பனா சோரன் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. இந்த பதவியேற்பு மூலம் பாஜகவின் அரசியல் சதியை ஹேமந்த் சோரன் முறியடித்துள்ளார்.