india

img

ஆட்டம் காணும் இந்துத்துவா கூடாரம்

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்ததை விட, ராமர் கோவில் அமைந்து இருக்கும் பைசாபாத் தொகுதியை (அயோத்தி கோவில் இருக்கும் தொகுதி) பாஜக இழந்தது தான்,  அக்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. காரணம் உத்த ரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி யில் ரூ.2000 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள ராமர் கோவில் பாஜக வின் அரசியல் ஆதாயப் பொரு ளாக உள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவை மக்களவை தேர்தலின் பிரச்சாரப் பொருளாக பயன்படுத்திக்கொண்டார் மோடி. மக்களவை தேர்தலில் ராமர் கோ வில் அமைந்து இருக்கும் அயோ த்தி சட்டமன்ற தொகுதியை உள்ள டக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறங் கிய தலித் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாள ரான அவதேஷ் பிரசாத் 54,567 வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பா ளர் லல்லு சிங்கை வீழ்த்தி நாடாளு மன்றத்திற்குள் கம்பீரமாக காலடி வைத்துள்ளார்.

பைசாபாத் வெற்றியை “இந்தி யா” கூட்டணி மட்டுமின்றி நாடு முழு வதும் அனைத்து தரப்பு மக்களும் வெகு விமரிசையாக கொண்டாடிய நிலையில், இந்த சம்பவம் பாஜக வின் இந்துத்துவா அரசியலுக்கு பலத்த அடி என எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் விமர்சனங்கள் மூலம் வறுத்தெடுத்தனர். அயோ த்தி சம்பவத்தையே பாஜக இன் னும் ஜீரணக்க முடியாத நிலையில், வட மாநிலங்களின் முக்கிய கோவில் நகரமாக இருக்கும் பத்ரி நாத் தொகுதியையும் இழந்து  பாஜக மேலும் கூடுதல் சேதாரத் தை சந்தித்துள்ளது.

நாடு முழுவதும் 7 மாநிலங்க ளில் காலியாக இருந்த 13 சட்ட மன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10 அன்று நடைபெற்ற நிலை யில், ஜூலை 13 அன்று வாக்கு எண் ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்த முள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ்,  திரிணாமுல் காங்கிரஸ் தலா 4 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி, திமுக தலா ஒரு தொகுதி என எதிர்க்கட்சிக ளின் “இந்தியா” கூட்டணி 10 தொகு திகளை கைப்பற்றி அசத்தியது. பாஜக வெறும் 2 தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு தொகுயிலும் வெற்றி பெற்றனர்.

பாஜக வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது என்பதை விட உத்தரகண்ட்  மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் சட்டமன்ற தொ குதியை இழந்தது தான் அந்த கட்சி க்கு மிகப்பெரிய அடியாக பார்க் கப்படுகிறது. காரணம் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவி லைப் போன்று “இமயமலை சாரல் கோவில் நகரம்” என அழைக்கப் படும் பத்ரிநாத்தில் உள்ள விஷ்ணு கோவிலில் பூஜையுடன் அடிக்கடி சிறப்பு ஷூட்டிங் ஷாட்டை வெளியி டுவார். பூஜை ஷூட்டிங் முடிந்த பின்பு கோவில் வாசலில் மறைமுக வெறுப்பு கருத்துக்களுடன் இந்துத் துவா சொற்பொழிவை அரங் கேற்றுவார். இதனால் அயோத்தி யை போல பத்ரிநாத்தும் பாஜக வின் இந்துத்துவா அரசியல் அடை யாளமாக உள்ள நிலையில், தற்போது பத்ரிநாத் சட்டமன்ற தொ குதியையும்  பாஜக இழந்துள்ளது. பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புடோலா 5,224 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ராஜேந்திர சிங் பண்டாரியை வீழ்த்தினார்.

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்தையும் இழந்துள்ள நிலை யில், பாஜகவின் இந்துத்துவா கூடாரம் ஆட்டம் காணும் நிலைக்கு சென்றுள்ளது.

ஆளுங்கட்சியாக இருந்தும் 
3 மாநிலங்களில் பாஜக படுதோல்வி
உத்தரகண்டில் பாஜக “0”

இடைத்தேர்தலை எதிர்கொண்ட 7 மாநிலங்களில் 4 மாநிலங்க ளில் (தமிழ்நாடு, மேற்குவங்கம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப்) “இந்தியா” கூட்டணியும், 3 மாநிலங்களில் (பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட்) பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

“இந்தியா” கூட்டணி ஆட்சி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் 4 மாநி லங்களில் நடைபெற்ற 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை “இந்தியா” கூட்டணி கட்சிகளே கைப்பற்றின. ஆனால் பாஜக ஆளும் 3 மாநி லங்களில் ஒரு மாநிலத்தில் (மத்தியப்பிரதேசம்) மட்டுமே ஆளுங்கட்சி என்ற முறையில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இரண்டு மாநிலங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்து பலத்த அடி வாங்கியுள்ளது. 

குறிப்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிக ளிலும் (மங்களூரு, பத்ரிநாத்) எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆளும் பீகார் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளரிடம் ஐக்கிய ஜனதா தளம்  வேட்பாளர் தோல்வியை தழுவியுள்ளார். மொத்தத்தில் 13 தொகுதி களில் 11 தொகுதிகளில் பாஜகவிற்கு பலத்த அடி கிடைத்துள்ளது. இந்த  இடைத்தேர்தல் தோல்வி பாஜகவின் வீழ்ச்சி மேலும் வலுப்பெற்றுள்ள தாக  அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.