india

img

தில்லி ஓட்டலில் ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை!

தில்லியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில், ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை, மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளை இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆர்டோர் 2.1 என்ற பிரபலமான ஹோட்டலில், “ஆர்ட்டிகள் 370 தாளி” என்ற பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த உணவு சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. சைவ உணவின் விலை ரூ.2,370, அசைவ உணவின் விலை ரூ.2,669 என விற்பனை செய்யப்படுகிறது. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அரசு அடையாள அட்டையை காட்டினால் ரூ.370 குறைக்கப்படுகிறது.  

;