இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,874 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பு தினமும் 10 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5,874 பேருக்கு கோவிட் தொற்றால் பாதித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49,015 ஆக உள்ளது.