india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 44 அணைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு நீர்மட்டம் குறைந்துள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தென்னிந் திய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு வெறும் 17 சத வீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் நீர் இருப்பு 29 சதவீதமாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாகவும் இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், நைனிடால் மலைப் பகுதியில் அதிகரித்த வெப்பத்தின் காரண மாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால்  அம்மாநில அரசு ராணுவ உதவியை நாடி யுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்து கிராம மக்களும் லோக் அதாலத் பற்றி தெரிந்து வைத்திருக்கி றார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்று  உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா பெருமிதம் தெரிவித்தார். 

தில்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால்,”அரசியல் எதிரிகளை பழிவாங்கு வதற்காக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது” என்று கூறி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

வக்பு வாரிய முறைகேடு வழக்கில் கைது செய்  யப்பட்ட தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அம னத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்த  நிலையில், சனியன்று அமனத்துல்லா கானுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பெற்றோரின் சம்மதக் கடிதம் உட்பட எவ்வித  ஆவணங்களும் இன்றி பீகாரிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 95 சிறுவர்களை குழந்தைகள் நல ஆணைய அதி காரிகள் மீட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி கல்லூரி மாணவி  நேஹா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  பயாஸின் டிஎன்ஏ பரிசோதனைக்கு சிஐடி அதி காரிகள், நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

புதுதில்லி
அம்பலமானது 
ஒன்றிய அமைச்சரின் “பொய் அறிக்கை”

2023 அக்டோபர் 29 அன்று  ஆந்திர மாநிலம் விஜய நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கண்டகப்பள்ளி ரயில் நிலை யத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரண மாக நின்று கொண்டிருந்த ராயகடா பய ணிகள் ரயில் மீது, பலசா விரைவு ரயில்  அதிவேகத்தில் மோதியது. இந்த கோர  விபத்தில் பலசா விரைவு ரயில் ஓட்டு நர்கள் (லோகோ பைலட்கள்) உட்பட 17  பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்தனர்.

ரயில் விபத்துக்கான காரணம் குறித்து  அப்போது பேசிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், “ரயிலை இயக்கிய இருவரும் கிரிக்கெட்  போட்டி பார்த்துக் கொண்டிருந்ததால், சிக்னல்களை  கவனிக்காமல் வேகமாக  ரயிலை இயக்கியுள்ளனர். அதனால்தான்  கட்டுப்பாட்டை மீறி ரயில் மோதி விபத்து  ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். 

இந்நிலையில், கண்டகப்பள்ளி ரயில்  விபத்து தொடர்பாக இறுதிக்கட்ட விசா ரணை அறிக்கை தற்பொழுது வெளியாகி யுள்ளது. அதில்,”ரயில் விபத்தில் உயிரி ழந்த லோகோ பைலட்களின் மொபைல்  சிக்னல்களை ஆய்வு செய்ததில் அமைச்  சர் கூறியது பொய் என்று தெரியவந்தது. அமைச்சர் கூறியது போல ரயிலை இயக்  கிய இருவரும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கவில்லை” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திசை திருப்ப...
மோடி பிரதமர் ஆன பின்பு ரயில்வே  துறை படுமோசமான அளவில் ஆட்டம் கண்டு வருகிறது. தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில் ரயில்வே துறைக்  கான நிதியை மோடி அரசு குறைத்து வரு வதால், ரயில்வேதுறை நிதி சிக்கலால் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் திண்டாடி வருகிறது. இத னால் நாட்டில் அடிக்கடி ரயில் விபத்து  சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில்,  இதனை மறைக்க லோகோ பைலட் மீது  பழியை தூக்கிப்போடுவதை ஒன்றிய  மோடி அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், ஆந்திரா ரயில் விபத்து  தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ் வினி வைஷ்ணவ் கூறியது விசாரணை அறிக்கை மூலம் “பொய்” என அம்பல மாகியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

இம்பால்
ஓராண்டாக 
எரிகிறது மணிப்பூர்
பிரதமர் இன்னமும்
ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்

பாஜகவின் இழிவான அரசிய லால் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் கடந்த ஓராண்டாக பற்றி எரிந்து வரு கிறது. இந்த வன்முறை யால் மாநிலம் முழு வதும் 200க்கும் மேற் பட்டோர் உயிரிழந்த னர். இந்நிலையில், பல லட்சம் மக்கள்  சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்ற னர். இந்த வன்முறை ஓராண்டாக இடை விடாமல் நிகழ்ந்து வரும் நிலையில்,  இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்  நடைபெற்ற நாளான வெள்ளியன்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா  பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த சிஆர்பிஎப் 128 ஆவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களை நோக்கி மர்மநபர்கள் வெடிகுண்டுகள் வீசினர். இதில் இரண்டு சிஆர்பிஎப்  வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னும் வன்முறைத் தீயில்  எரிந்து கொண்டிருக்கிறது” என்று காங்கி ரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”மணிப்பூர் மாநி லத்தின் வன்முறை, மரணம் குறித்து மோடி கவலைப்படாமல் மகிழ்ச்சியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். வன்முறை யில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்  பத்தினருக்கு மன வலிமை கிடைக்கட் டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

லக்னோ
பீகாரில் இருந்து உ.பி.க்கு 95 குழந்தைகள் கடத்தல்?

பீகார் மாநிலம் ஆராரியா பகுதியிலி ருந்து உத்தரப்பிரதேச மாநிலம் சஹ ரான்பூருக்கு இரண்டு அடுக்குகள் கொண்ட  பேருந்து ஒன்றில் குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து உத்தரப்பிரதேச குழந் தைகள் நலவாரியத்தின் தலைவர் சர் வேஷ் அவஸ்தி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, சஹரன்பூர் பகுதியில் உள்ள தேவ்காலி புறவழிச்சாலையில் அந்த  பேருந்தை தனது துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் இணைந்து நிறுத்தியுள்ளார். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் ஆவ ணங்கள் இன்றி 4 முதல் 12 வயதுக்குட் பட்ட 95 சிறுவர்கள் பேருந்தில் இருப்பது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகளை மீட்டு மருத்துவ உதவி கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பய ணத்திற்காக ஆவணங்கள் எதுவும் இல்லாததால் குழந்தைகள் நலவாரியம் சிறுவர்களை தங்கள் வசம் அழைத்துச் சென்றது. 95 குழந்தைகளின் பெற் றோர்கள் வந்தவுடன் குழந்தைகளை ஒப்படைப்போம் என உத்தரப்பிரதேச குழந்தைகள் நலவாரியத்தின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறினார்.

;