india

img

2 மாநில சட்டமன்றத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டி மகாராஷ்டிராவில் 3 ; ஜார்க்கண்டில் 9

மும்பை/ராஞ்சி 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத் திற்கு இரண்டு கட்டமாக (நவம்பர் 13 மற்றும் 20) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதே போல  288 தொகுதிகளைக் கொண்ட மகா ராஷ்டிராவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறு கிறது. இரண்டு மாநிலங்களிலும் வேட்புமனுத்தாக்கல், வேட்பா ளர்களின் இறுதி பட்டியல் வெளி யாகியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய  இரண்டு மாநி லங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 12 இடங்களில் போட்டி யிடுவதாக அதிகாரப்பூர்வ செய்தி கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா :

 மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி தலை மையில் தஹானு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ வினோத் நிகோ லும், கல்வான் தொகுதியில் ஜே.பி. காவிட்டும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடு கின்றனர். அதே போல சோலாப் பூர் சிட்டி மத்திய தொகுதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடி வடைந்தது. இதனால் சோலாப்பூர் சிட்டி மத்திய தொகுதியில் சிபிஎம் தனித்து போட்டியிடுவதாக சிபிஎம் மத்தியக் குழு அறிவித்தது. அதன் படி சோலாப்பூர் சிட்டி மத்திய தொ குதியில் மூன்று முறை எம்எல்ஏ வான ஆதம் நரசய்யா சிபிஎம் சார்பில் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார்.

ஜார்க்கண்ட் :

ஜார்க்கண்டில் ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சிகள் அடங்கிய கூட்டணியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடி வடைந்தது. இதனால் ஜார்க் கண்டில் பகராகோரா (சபன் மகதோ), சிசை (மதுவா கச்சாப்), சத்ரா (புன் புய்யோ), ஜம்தாரா (லக்கன் லால் மண்டல்), பாகூர் (எம்.டி. ஷேக் சைபுதீன்), மகேஷ் பூர் (கோபின் சோரன்), ஜமா (சனா தன் தெஹ்ரி), மந்தர் (கீர்த்தி முண்டா) உள்ளிட்ட 9 தொகுதிக ளில் சிபிஎம் போட்டியிடுகிறது.

72 தொகுதிகளில் ஜேஎம்எம் -காங்கிரஸ் - ஆர்ஜேடிக்கு ஆதரவு
“கோடி மீடியா” ஊடகங்களுக்கு சிபிஎம் பதிலடி

ஜார்க்கண்டில் மாநில அரசியல் நிலைமைக்கு ஏற்ப சிபிஎம்உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. உடனே பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் ஜார்க்கண்டில் “இந்தியா” கூட்டணி உடைந்துவிட்டது, சிதறிவிட்டது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு வந்தது. 

இந்நிலையில், ஜார்க்கண்டின் 9 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டாலும், மீதமுள்ள 72 தொகுதிகளில் ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வோம் என
“கோடி மீடியா” ஊடகங்களுக்கு சிபிஎம் பதிலடி கொடுத்துள்ளது.