india

img

மகளிருக்கு ரூ.1000 தில்லி அரசு அறிவிப்பு

“இந்தியா” கூட்டணியில் அங்கம்  வகிக்கும் அரவிந்த் கெஜ்ரி வாலின் ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநிலத்தின் பட்ஜெட் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டது. தில்லி நிதித்  துறை அமைச்சர் அதிஷி தாக்கல் செய்த  76,000 கோடி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 16,396 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக 18  வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண் களுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என தில்லி அரசு அறி வித்து இருப்பது அம்மாநில மக்களி டையே வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெ னவே தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக  அரசு அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.