india

img

லண்டனில் வைரவியாபாரி நீரவ் மோடி கைது

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13000 கோடி மோசடி செய்த லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தை வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்திடாமல் மோசடியில் ஈடுபட்டார்.

இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார்.

இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை கடந்த 18ந்தேதி பிறப்பித்தது. இந்நிலையில் இன்று நீரவ் மோடி கைது லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு செல்ல உதவியதே பாஜகதான். தற்போது அவரை நாடாளுமன்றத்தேர்தலுக்காகவே கைது செய்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என காங்கிரஸ் மூத்ததலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டி உள்ளார்.

;