பிஎச்இஎல் (BHEL) ஊழியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தின் முன்னோட்டமாக இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் தபன் சென் தலைமையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஹரித்வார், ஜான்சி, போபால், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருச்சி மற்றும் திருமயம் ஆகிய 8 பிஎச்இஎல் யூனிட்களைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.