india

img

இன்று பூமிக்கு அருகில் வரும் சனிக்கோள்

இன்று பூமிக்கு அருகில் வரும் சனிக்கோளை வெறும் கண்களால் காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆண்டுக்கு ஒருமுறை பூமியும், சனியும் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும். இரண்டு கிரகமும் அதன் சுற்றுப்பாதையில் சுழலும்  காலமான 1 வருடம் மற்றும் 13 நாட்களில் இருகோள்களும் நெருங்கி வருகிறது. இதற்கு முன்பாக ஜூலை 20, 2020 அன்று நடைபெற்ற இந்நிகழ்வு, ஆகஸ்ட் 14 2022 அன்று மீண்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சனிக்கோள் பூமிக்கு அருகில் வரவுள்ளது. இந்நிகழ்வின்போது சனிக்கோளை நன்றாகக் காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்
துள்ளனர். இன்று காலை 11:30 மணியளவில் சனியும் பூமியும் நெருக்கமாக இருக்கும் என்று ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து 
பட்நாயக் கூறியுள்ளார்.

மேலும், இன்றிரவு எங்கிருந்தாலும் சனிக்கோளை பொதுமக்கள் காணலாம். சாதாரணமாக பைனாகுலர் மூலம் சனிக்கோளின் வளையத்தைக் காணலாம். ஆனால், நவீன தொலைநோக்கி மூலம் பார்த்தால் வளையத்துக்கும் கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூட காண முடியும். வெறும் கண்களால் பார்க்
கும்போது சனிக்கோள் விண்மீன் போலத் தெரியும். அனால், நன்றாக உற்றுப் பார்த்தால் விண்மீன் போல விட்டுவிட்டு ஒளிராமல் தொடர்ந்து ஒளிர்வதைக் கொண்டு, அது சனிக்கோள் என உறுதி செய்யலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். 

;