india

img

மதவழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை உறுதியுடன் அமல்படுத்துக!

“அயோத்தி தொடக்கம்தான், அடுத்து மதுரா, காசி பாக்கி இருக்கின்றன” என்பது அயோத்தியில்  ராம ஜென்மபூமி கிளர்ச்சிப் போராட்டத்தை விசுவ இந்து பரிசத்தும், இதர இந்துத்துவா அமைப்புகளும் நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் எழுப்பப்பட்ட கோஷமாகும். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளேயே, ராமர் கோவி லைக் கட்டுவதற்கான அஸ்திவார விழா நடத்தி வெற்றி பெற்றபின்னர், அதே இந்துத்துவா சக்திகள் இப்போது காசி மற்றும் மதுரா எனப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின் றன. இப்போது இவர்கள் இலக்கு வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி (Gyanvapi mosque) மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா (Shahi Idgah) மசூதி ஆகியவைகளா கும். இவ்விரு மசூதிகளும் கோவில்கள் இருந்த இடத்தில் அவற்றை இடித்துவிட்டு 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வை என்று கூறுகிறார்கள். முகலாயச் சக்கரவர்த்தி அவுரங்க சீப் ஆட்சி புரிந்த சமயத்தில் இது நடந்தது என்பது ஒரு வர லாற்று உண்மை.

காமாலைக் கண்களின் பார்வை...
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகள், வர லாற்றின் தவறுகளையெல்லாம் “சரி” செய்வதற்கு முன்னு ரிமை அளிக்கின்றன. அதிலும் வரலாறு குறித்த அவர்க ளின் “காமாலைக் கண்களுக்கு” முஸ்லீம்கள் ஆட்சி என்பது இந்துக்களை அடிமையாக நடத்திய ஆட்சியாகும். எனவே இது தொடர்பாக இருக்கும் அனைத்து அடையாளங்களும் இடிக்கப்பட வேண்டும் என்பதாகும்.  காசியிலும், மதுராவிலும் இருக்கும் மசூதிகள் இருந்த இடங்களில் கோவில்கள் இருந்ததாக, இவர்கள் நீதிமன்றத் தில் வழக்குகள் தாக்கல் செய்வதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கும்போதே, காசி மற்றும் மதுராவில் மசூதி களைக் “கைப்பற்றுவதற்கான” அணிதிரட்டலையும் தொ டங்கிவிட்டார்கள். இந்த மசூதிகள்-கோவில்கள் தொடர்பாக வாரணாசி மற்றும் மதுரா நீதிமன்றங்களில் ஏராளமான மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன், தில்லி யில் உள்ள குதுப்மினாரில் உள்ள தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் சிலைகள் குறித்தும், மத்தியப் பிரதேசத்தில் போஜ் சாலை வளாகம் குறித்தும், ஏன், ஆக்ராவில் உள்ளதாஜ் மகால் குறித்தும்கூட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இத்தகைய பிளவுவாத மற்றும் பிற்போக்குத்தனமான தாவாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 1991இல் மத வழிபாட்டுத்தலங்கள் (சிறப்பு ஷரத்துக்கள்) சட்டம், நரசிம்மராவ் பிரதமராக இருந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் 3ஆவது பிரிவு மிகவும் தெளிவாகவே வழி பாட்டுத் தலங்களை மாற்றுவதற்குத் தடை விதித்திருக்கி றது. மேலும், 4(1)ஆவது பிரிவானது, 1947 ஆகஸ்ட் 15 அன்று ஒரு வழிபாட்டுத் தலம் எந்த மதத்தின் கீழ் அமைந் துள்ளதோ அவ்வாறே தொடரும் என்றும் கூறுகிறது. மேலும், 4(2)ஆவது பிரிவு, வழிபாட்டுத் தலங்களின் தற்போ தைய மதத்தின் தன்மையை மாற்றுவதற்காகப் புதிய உத்த ரவுகள் பிறப்பிப்பதற்காகத் தொடங்கப்படும் நடவடிக்கைக ளைத் தடை செய்கிறது. இதுதொடர்பாக நிலுவையில் ஏதே னும் வழக்குகள் இருந்தால் அவை நீர்த்துப் போனதாகக் கருதப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

வாரணாசி நீதிமன்ற உத்தரவு மதவழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரானது
அப்போது ராமஜென்ம பூமி தாவாவுக்கு மட்டும் விதி விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கியான்வாபி மசூதி வழக்கைப் பொறுத்தவரை, வாரணாசியில் உள்ள ஓர் உரிமையியல் நீதிமன்றத்தில் ஐந்து பெண்கள் மசூதியின் வளாகத்திற்குள் உள்ள “மா சிருங்காரி கௌரி” அம் மனைக் கும்பிடுவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய் துள்ளனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதி மன்றம், மசூதி வளாகத்தில் காணொளி மூலமாக ஆய்வு (videographic survey) நடத்தப்பட வேண்டும் என்று உத்த ரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு, மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிரானதாகும். ஏனெனில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்தவொரு வழிபாட்டுத் தலம் குறித்தும் கேள்வி எழுப்புவதோ அல்லது அதனை அரித்து வீழ்த்திட நடவடிக்கை எடுப்பதோ இதன் ஷரத்துக்களை மீறும் செயலாகும். நீதிமன்றம் ஆய்வு நடத்த அறிவித்துள்ள விதமே கேள்விக்குரியதாகும். இது தொடர்பாக அறிக்கை யானது, மசூதியின் வளாகத்திற்குள் உள்ள தண்ணீர்த் தொட்டியில் “சிவலிங்கம்” இருந்ததாகக் கூறப்பட்டு, அந்த அறிக்கை ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டது. மசூதி நிர்வாகத்தினர், அங்கேயிருந்த கல் கட்டமைப்பு ஒரு நீரூற்று என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது
மசூதியை நிர்வகிப்பவர்கள், உரிமையியல் நீதிமன் றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு வழி பாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறியிருக்கின்றன என்றும் அதனை அனுமதிக்காது தள்ளுபடி செய்திட வேண்டும் என்றும் கோரியபோது, உச்சநீதிமன்றம் மசூதியில் காணொளி ஆய்வு மேற்கொண்டதற்குத் தடையாணையும் விதிக்கவில்லை, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறியி ருப்பதாகக் கூறிய மனுவின்மீது தலையிட்டு தடை விதிக்க வும் இல்லை. இது தொடர்பாக நடைபெற்ற அமர்வாயத்திற் குத் தலைமை தாங்கிய நீதியரசர் சந்திரசூட், “வழிபாட்டுத் தலம் குறித்த மதத்தின் தன்மையை உறுதிப்படுத்துவது சட்டத்தால் தடை செய்யப்படவில்லை” (“ascertainment of the religious character of a place is not barred…by the Act”) என்று கூறியிருக்கிறார். இத்தகைய அணுகுமுறை யானது, 2019இல் அயோத்தி தாவாவில் உச்சநீதிமன்றமே அளித்த தீர்ப்பின் உணர்வுக்கு எதிரானதாகும்.  அப்போது நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறி யிருந்ததாவது: “சட்டம் என்பது நாட்டை ஆளும் அரசை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துமோ அதே அளவுக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். …

அரசு, சட்டத்தை நிறைவேற்றியதன்மூலம், அது தன்னுடைய அரசமைப்புச்சட்டக் கடமையை அமல்படுத்திட வேண்டும் மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களாக விளங்கும் அனைத்து மதங்களின் சமத்துவத்தையும், மதச் சார்பின்மையையும் உயர்த்திப்பிடிக்கவும் தன்னுடைய அரசமைப்புச்சட்டக் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தி டவும் வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் சட்டமானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மதச்சார்பின்மையை அமல்படுத்துவது தொடர்பாக எம்மதத்தையும் இழிவு படுத்த முடியாத தன்மையை அளிக்கிறது. எனவே, இந்தச் சட்டமானது நாட்டின் அரசியலின் மதச்சார்பற்ற அம்சங்க ளைப் பாதுகாத்திட நாடாளுமன்றத்தின் மூலம் உருவாக் கப்பட்ட ஒரு கருவியாகும். … வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நம் மதச்சார்பற்ற விழுமியங்களின் அத்தியாவசிய அம்சமாக எம்மதத்தையும் இழிவுபடுத்தாத தன்மையைப் பேணிப் பாதுகாத்திடுவதற்கான நாடாளுமன்றத்தின் தலையீடாகும்.” உச்சநீதிமன்றம் இவ்வாறு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை (validity) குறித்துத் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளபோதிலும், இப்போதைய உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தின் ஷரத்துக்களை உறுதி யுடன் உயர்த்திப்பிடிக்கவும், வாரணாசி உரிமையியல் நீதி மன்றத்தில் உள்ள மனு மீதான நடவடிக்கைகளை மறுத லிக்கவும் மறுத்திருப்பது, ஏமாற்றத்தை அளிக்கிறது.

மாறாக, மாவட்ட அளவில் ஒரு மூத்த நீதிபதியால் அனைத்து மனுக்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்திருக்கிறது. அதாவது நம்முன் உள்ள வழக்கில் வாரணாசியில் உள்ள ஒரு மாவட்ட நீதிபதி இவ்வழக்கை விசாரிப்பார். இவ்வாறு ஓரிடத்தின் மதத்தின் தன்மையை (religious character of a place) உறுதிப்படுத்திட வழி திறக்கப்பட்டால், இதனைத் தொடர்ந்து வெள்ளமென மனுக்கள் நீதிமன்றங்களில் குவியத் தொடங்கிவிடும். விளைவு, பல்வேறு மதச் சமூகத்தினருக்கிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

ஆபத்தான வழிதிறப்பு
காசியிலும் மதுராவிலும் உள்ள வழிபாட்டுத்தலங்க ளின் தன்மையை மாற்றுவது தொடர்பாக, சட்டரீதியாக வழக்குகள் தொடுப்பதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக, கீழமை நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் உடந்தையாயிருப்பது, பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. மதுராவில், மாவட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்து விட்டு, மசூதி கட்டப்பட்டுள்ள இடம் குறித்த இடத்தில் உடை மையாளர் யார் என்பது குறித்து ஸ்ரீகிருஷ்ணா ஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளை அனுமதித்திருக்கி றார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நீதி மன்றங்களில் இருந்த மேன்முறையீடுகள், சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டத்தைப் பிரயோ கிக்க முடியாது என்று இந்தச் சட்டத்தில் ஒரு பிரிவு இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, நீதிபதி இவ்வாறு செய்திருக்கிறார். 1974இல் கோவில் மற்றும் மசூதி நிர்வா கங்களுக்கிடையே அளிக்கப்பட்ட சமரசத் தீர்ப்பாணையை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் கடும் விலைவாசி உயர்வுகளாலும், இதர பொரு ளாதார சிரமங்களாலும் அவதிப்பட்டுக்கொண்டி ருக்கக்கூடிய சூழலில் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறு கோவில்-மசூதி தாவாக்கள் இப்போது திடீரென்று எழுப்பப்பட்டிருப்பதாகப் பல்வேறு விமர்சகர்களும், அரசியல் நோக்கர்களும் கருதுகிறார்கள். மற்றொரு அரசியல் பார்வை என்னவெனில் இவ்வாறு மத வெறித் தீயை விசிறிவிடுவது 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-விற்கு ஆதாயமாக அமைந்திடும் என்பதுமாகும். இவை அனைத்தும் உண்மையாக இருக்கக்கூடும் என்று கூறப்படும் அதே சமயத்தில், அவர்கள் இவையெல்லா வற்றைக் காட்டிலும் மிகவும் ஆழமான காட்சி ஒன்றைக் காணத் தவறிவிட்டார்கள். அதாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங் கள் இந்தியாவை, இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றிட, இந்துத் துவா நிகழ்ச்சிநிரலின் அனைத்து அம்சங்களையும் அமல் படுத்திட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். நம்முன் உள்ள சவால் என்பது தேர்தல் அல்லது அரசியல் உபாயங்களைவிட அடிப்படையில் மிகவும் மோசமான தாகும். பாஜக-வை எதிர்த்திடும் அனைத்து சக்திகளும் எவ்வளவு விரைவாக இதனை உணர்கிறார்களோ அவ்வளவுக்கு அது நாட்டுக்கு நல்லது. மே 25, 2022, தமிழில்: ச.வீரமணி

;