india

img

பிரதமர் மோடியின் ‘100 நாடுகள்’ சாதனையை கெடுத்த கொரோனா... ஓராண்டாக வெளிநாடு செல்ல முடியவில்லை...

புதுதில்லி:
நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கு வந்த 2014-ஆம் ஆண்டு ஜூன்மாதம் முதல் 2019 நவம்பர் வரை மொத்தம் 96 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 

2014-இல் 8 நாடுகளுக்கும், 2015-ஆம் ஆண்டில் 23 நாடுகளுக்கும், 2016-ஆம் ஆண்டு 17 நாடுகளுக் கும், 2017-இல் 14 நாடுகளுக்கும், 2018-இல் 20 நாடுகளுக்கும், 2019-ஆம் ஆண்டில் 14 நாடுகளுக்கும் அவர் சென்று வந்தார்.இந்த சுற்றுப் பயணங்களுக் காக, 2014 ஜூன் முதல் 2019 மார்ச் வரை 393 கோடியே 58 லட்சம் செலவானதாக கூறப்பட்டது. உள்நாட் டுப் பயணச் செலவு ரூ. 311 கோடிஇதில் சேராது.இந்நிலையில், 2020-ஆம் ஆண்டிலும் அவர் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைத் தொடர் வார்; 100 நாடுகளை சுற்றிவந்த சாதனையை மோடி படைப்பார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.ஆனால், 2020 மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றுப் பரவல், நாட்டின் தொழிலை, மக்களின் வாழ்க்கையை முடக்கிப் போட்டது போல, மோடியின் சுற்றுப்பயணத்திற்கும் தடையாகி விட்டது. 2019 நவம்பரில் பிரேசிலுக்குச் சென்றதுதான், பிரதமர் மோடியின் கடைசி வெளிநாட்டுப் பயணம். அதற்குப் பிறகு ஓராண்டாக அவர்இந்தியாவை விட்டு செல்லவில்லை என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

;